இன்று முதல் ஒரு வாரத்திற்கு இறைச்சி விற்பனை கடைகளுக்கு பூட்டு: கிழக்கு ஆளுநர்

Date:

இன்று முதல் ஒரு வார காலத்திற்கு அனைத்து இறைச்சிக் கடைகள் மற்றும் இறைச்சி விற்பனை நிலையங்கள்  (கோழிக் கடைகளைத் தவிர) மூடுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று  ஆளுநரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ,  கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக கிழக்கு மாகாணத்தில் நிலவும் கடும் குளிரான காலநிலை காரணமாக அதிகளவான கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொலை செய்யப்பட்ட விலங்குகள் என்ற போர்வையில் இந்த சடலங்களை சட்டவிரோதமாக வேறு மாவட்டங்களுக்கு கொண்டு செல்லவும், இறைச்சிக் கடைகளில் விற்கவும் வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறினார்.

எனவே, அவ்வாறான நிலை ஏற்படாத வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இறந்த கால்நடைகளை சட்டவிரோதமாக கொண்டு செல்வதைத் தவிர்க்க, அந்தந்த உள்ளாட்சி அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும் அல்லது அனைத்து கால்நடைகளின் சடலங்களையும் பொது இடத்தில் புதைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...