இன்று முதல் மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

Date:

தெற்கு மற்றும் எல்ல சுற்றுலா வலயங்களுக்கு டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் இரவு நேர மின்வெட்டினை அமுல்படுத்தாது இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், டிசெம்பர் 15ஆம் திகதி வரை மதியம் ஒரு மணி நேரமும், இரவில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்களும் நாட்டின் ஏனைய பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, டிசம்பர் 15ஆம் திகதிக்கு பின்னர் சுற்றுலா அமைச்சினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள அனைத்து சுற்றுலா வலயங்களுக்கும் இரவு நேர மின்வெட்டு இருக்காது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஆனால் நாட்டின் மற்ற பகுதிகளில் இரவு நேரங்களில் மின்வெட்டு ஒரு மணி நேரமாக குறைக்கப்படும்.

மேலும், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு தினங்களில் மின்வெட்டு இருக்காது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

மொராக்கோவில் வெடித்த GenZ போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

மொராக்கோவில், அரசுக்கு எதிரான இளம் தலைமுறையினரின் நாடுதழுவிய மாபெரும் போராட்டத்தில், பொலிஸார்...

ரிஷாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மனு விசாரணை திகதி அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை...

வரலாற்றுத் தடம் பதித்த கள்-எலிய கலை விழா!

கவியரங்கு, கலை விழா மற்றும் மீலாத் கவிதை நூல் வெளியீடு உள்ளிடக்கிய ...