ஜப்பானில் கார் இருக்கை உற்பத்தி தையல் தொழில் வாய்ப்புகளுக்கான விண்ணப்பங்களை அடுத்த வாரம் ஏற்றுக்கொள்ளவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
பத்தரமுல்லையில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமை அலுவலகத்தில் 2022 டிசம்பர் 28 புதன்கிழமை நடைபெறவுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகுதியுடையவர்கள் பதிவு செய்ய முடியும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை கொண்டு வருமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சம்பந்தப்பட்ட தகுதியுள்ள விண்ணப்பதாரர்களைக் கோருகிறது.
மேலும் படிவங்களை SLBFE இன் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.