இளைய தலைமுறையினருக்கான வழிகாட்டல் மாநாடு: நாளை நிந்தவூரில்!

Date:

இளைய தலைமுறையினருக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இளைஞர் வழிகாட்டல் மாநாடு நாளை (03) சனிக்கிழமை காலை 8:30 தொடக்கம் நிந்தவூர் அல் – அஷ்ரக் தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெறும்.

பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், பாடசாலை அதிபர் ஏ.அப்துல் கபூரின் பங்களிப்புடன் இடம்பெறும் இவ்விழாவில், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி என். புள்ளை நாயகம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்கிறார்.

அஸ்ஸெய்யத் றஸ்மி மௌலானாவின் ஒருங்கமைப்பில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சஹதுல் நஜீமின் தலைமையில் இடம்பெறுகின்ற இந்நிகழ்வில், தமிழ்கூறு நல்லுலகில் அன்புக்குரிய ஒலிபரப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் பிரதம அதிதியாகவும் பிரதம பேச்சாளராகவும் கலந்து கொள்கிறார்.

அதிதிகளுடன் கலந்து சிறப்பிக்கும் இளைய தலைமுறையினருக்கான இந்த மாபெரும் மாநாடுக்கு விரும்பியவர்கள் எவரும் கலந்து கொள்ளலாம் என ஏற்பாட்டுக் குழுவினர் திறந்த அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிகழ்வின் நேரடி ஒலிபரப்பு நாளை காலை 10 மணிக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பிறை எம்.எம். அலைவரிசையில் ஒலிபரப்பாகும்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...