ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு இன்று பொரளை கெம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் ஆரம்பமாக நடைபெறும் வருடாந்த மாநாட்டில் அனைத்துத் தொகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.
‘புரட்சிக்கு வழிவகுக்கும் களத்தில் இறங்குவோம்’ என்ற தொனிப்பொருளில் பிற்பகல் 02.00 மணிக்கு கெம்பல் மைதானத்தில் கட்சி மாநாடு ஆரம்பமாகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார மேலும் தெரிவித்தார்.