இன்று களனி பிரதேசத்தில் – கல்பொரல்ல சந்தியில் அமைந்துள்ள ஹேமாஸ் தனியார் வைத்தியசாலைக்கு சொந்தமான களஞ்சிய கட்டிடம் காலை திடீரென தீ பரவியுள்ளது.
குறித்த இடத்திற்கு களனி மாநகர சபையினால் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் நீர் பீரங்கிகளை அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அதனை தொடர்ந்து தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, ஆனால் உள் இயந்திரக் கோளாறால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிசார் கருதுகின்றனர்.
தீயினால் ஏராளமான பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டாலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சம்பவம் தொடர்பில் தற்போது பொலிஸாரினால் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.