காற்று மாசுபாடு: தோல், கண் நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை!

Date:

நிலவும் குளிர் காலநிலை மற்றும் காற்று மாசுபாடு காரணமாக சில நோய்கள் உருவாகலாம் என சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் மாற்றத்தின் சமீபத்திய நிலை மற்றும் உங்கள் ஆரோக்கியம் என்ற தொனிப்பொருளில் சுகாதாரப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

தற்போதுள்ள நிலைமைகளின் கீழ் தோல் நோய்கள் உருவாகலாம் என லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் தோல் நோய் வைத்திய நிபுணர் டொக்டர் ஸ்ரீயானி சமரவீர தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதக்காலத்தில் அதிகாமாக குளிர் கால நிலை ஏற்படுவது வழக்கம், எனினும் காற்று மாசுபாட்டை எடுத்துகொண்டால் வெயில் காலத்தில் காற்று மாசும் சேர்ந்து ஏற்படுவதால் பாதிப்பு அதிகமாகியுள்ளது.   காலை மாலை இரு தடவைகள் தோலை சுத்தப்படுத்திக்கொள்வது அவசியமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தற்போதுள்ள காற்று மாசுபாட்டுடன் கண் நோய்களும் அதிகரிக்கலாம் என தேசிய கண் வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் டாக்டர் கபில பந்துசேன தெரிவித்தார்.

கடந்த நாட்களை விட தற்போது கண் அரிப்பு, கண் சிவத்தல்  போன்ற அறிகுறிகளுடன் நோயாளர்கள் அதிகமாக வைத்தியாசாலைக்கு வருகைத்தருகின்றார்கள்.

அதேநேரத்தில் இந்த காற்று மாசுபாடு காரணமாக அதிகமான நோயாளர்கள் கண் மடல் காய்தல் போன்ற அறிகுறியே அதிகமாக காணப்படுகின்றன.

எனவே தற்காலிகமான நோய் குறிகள் என்றாலும் உடனடியாக சிகிச்சையளிக்கப்பட வேண்டும் என கண் வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டினார்.

 

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...