கொழும்பில் இன்று முதல் மலிவான விலையில் முட்டை!

Date:

கொழும்பு மற்றும் கம்பஹாவில்  இன்று முதல் முட்டை 55 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

முட்டை விலையை குறைக்க விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பல முட்டை உற்பத்தியாளர் சங்கங்களுடன் கலந்துரையாடினார்.

இதன்போது ஒரு முட்டையை 55 ரூபாய்க்கு விற்க அவர்கள் ஒப்புக்கொண்ட நிலையில் நாளை கொழும்பு மற்றும் கம்பஹாவில் முட்டை விற்பனை இடம்பெறவுள்ளது.

இதன்படி  கொழும்பு நகரம் மற்றும் கம்பஹா மாவட்டத்தை சூழவுள்ள பல இடங்களில் முட்டை விற்பனைக்காக 20 லொறிகளை ஈடுபடுத்த சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு புகையிரத நிலையம், தெமட்டகொட, கொம்பனி வீதி, தெஹிவளை, பத்தரமுல்ல, நுகேகொட, மஹரகம, மீகொட மற்றும் நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையங்கள்,  மற்றும் ஹோமாகம ஆகிய இடங்களில் இந்த முட்டைகள் விற்பனை செய்யப்படும்.

மேலும், வத்தளை, ஜாஎல, ராகம மற்றும் நீர்கொழும்பு, கிரிபத்கொட, கடவத்தை, பேலியகொட போன்ற நகரங்களில் முட்டைகளை விற்பனை செய்வதற்கு லொறிகளை வைக்க முட்டை உற்பத்தியாளர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...