தேர்தல் ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல்!

Date:

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோரும் திகதியை தீர்மானிப்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு இன்று காலை 10 மணிக்கு கூடவுள்ளதுஎன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள், தபால் மா அதிபர், அரச அச்சகர் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் 05ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

தேர்தலில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் பெயர்களை எதிர்வரும் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் வர்த்தமானி மூலம் அறிவிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...