‘நமது பொருளாதாரம் இன்னும் முச்சக்கர வண்டியைப் போன்றே உள்ளது’

Date:

யுத்தத்தின் பின்னர் பொருளாதாரம் மாற்றமடையாத காரணத்தினால் நாடு வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடவத்தை டொயோட்டா லங்கா நிறுவனத்தில் இன்று நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மேலும், அடுத்த ஆண்டுக்குள் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரித்து பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு எதிர்பார்ப்பதாக விக்ரமசிங்க தெரிவித்தார்.

வியட்நாமின் பொருளாதாரம் இன்று ‘ஃபார்முலா ஒன் பந்தய கார் போன்றது’. நமது பொருளாதாரம் இன்னும் முச்சக்கர வண்டியைப் போன்றே உள்ளது. பிறகு எப்படி சிங்கப்பூருக்குப் போய் ஓட்டப்போட்டிக்கு  போக முடியும்?

மற்ற நாடுகளில் ஃபார்முலா ஒன் பந்தய கார்கள் உள்ளன. முச்சக்கர வண்டியில் சென்று வெற்றிபெற முடியாது. எனவே, நாம் ஒரு பந்தய கார் கண்டுபிடிக்க வேண்டும். இந்த நாட்டை திறந்த பொருளாதாரமாக மாற்றுவதன் மூலம் அந்த காரை உருவாக்குகிறோம்.

உலகத்துடன் போட்டியிட போட்டிமிக்க  பந்தய காரை நாங்கள் உருவாக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த போட்டியில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

ஒலிபெருக்கி பயன்பாட்டிற்கு புதிய கட்டுப்பாடுகள்!

பொது நிகழ்வுகளின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான கால  காலவரையறைகள் குறித்து பொலிஸ்...

டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை மே முதலாம் திகதி...

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல் பதிவுகள் ஆரம்பம்!

வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள்...