நாட்டில் வேகமாகப் பரவி வரும் “Whitefly”

Date:

தென்னைச் செய்கை தொடர்பில் இக்காலத்தில் வேகமாகப் பரவிவரும் “வெள்ளைப் பூச்சி” (Whitefly) தொற்றின் நிலையான முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் ஜனாதிபதியின் பணிப்பாளர் நாயகம் தலைமையில் இடம்பெற்றது.

தென்னை உற்பத்தியாளர்களுக்கு இந்தப் பூச்சி அச்சுறுத்தல் குறித்து தெளிவுபடுத்துவதற்காக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களால் கிராம மட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செயல்படுத்தப்பட்டு, அவை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செயல்படுத்துவதில், மின்னணு மற்றும் அச்சிடப்பட்ட ஊடகங்கள் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் பங்கேற்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

காலநிலை மாற்றம், சட்டவிரோதமான முறையில் தென்னை மரக்கன்றுகளை பயிரிடுதல் மற்றும் இயற்கை ஒட்டுண்ணிகள் ஒரே நேரத்தில் குறைக்கப்பட்டமை போன்ற காரணங்களால் கொழும்பு, கம்பஹா உட்பட நாட்டின் பல பிரதேசங்களில் இந்த பூச்சித் தொல்லை பரவுவதுடன், தென்னைச் செய்கையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர். கேகாலை, களுத்துறையில் தற்போது இந்த பூச்சிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலைமையை அடக்குவதற்கு உரிய நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகளின் பற்றாக்குறை பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும், இதற்கு தீர்வாக பிரதேச சபையிலுள்ள அனைவரையும் உள்ளடக்கி வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதியின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் “வெள்ளை ஈ” பூச்சித் தாக்குதலால் சேதமடைந்த பயிர்கள் பற்றிய துல்லியமான தகவல்களை சேகரிப்பதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதியின் செயலாளர், பூச்சி அச்சுறுத்தலை அடக்குவதற்கு இது தொடர்பில் செயற்படும் பல்கலைக்கழக சமூகத்தின் ஆதரவைப் பெறுமாறு அறிவுறுத்தினார்.

ஒட்டுண்ணிகளை வளர்ப்பது மற்றும் உருவாகி வரும் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கும், ஒடுக்குவதற்கும் தேவையான இயந்திரங்களை கொள்வனவு செய்தல் போன்ற விரைவான தீர்வுகளை நாடுமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு மேலும் ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த கலந்துரையாடலில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...