பரவும் வைரஸ் காய்ச்சல் குறித்து சுகாதாரத் துறையின் அவசர அறிவிப்பு!

Date:

நாட்டில் பரவி வரும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.

வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்தும் விளக்கப்பட்டது.காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி போன்றன இந்த வைரஸிற்கான அறிகுறியாகும், அத்தோடு குழந்தைகள் பால் குடிக்காமை, பசியின்மை , காய்ச்சல் இருமல் சளி, ஏற்படுவதாக வைத்தியர் சுட்டிக்காட்டினார்.

மேலும் டெங்கு, கொவிட், மற்றும் சாதரண காய்ச்சலா என்று வைத்திய பரிசோதனைகளில் மூலமே கண்டறிய முடியும்.

ஆகவே முடிந்தளவிற்கு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதோடு முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும்.

குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறுவைத்திய நிபுணர் கோரிக்கை விடுத்துள்ளார்.

வைரஸ் காய்ச்சலால் தினமும் சுமார் 40 குழந்தைகள் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு வருவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

Popular

More like this
Related

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...