பலமான ஊடகக் கழகமொன்றினை அமைக்கும் நோக்கில் எனசல்கொல்ல மத்திய கல்லூரியில் ஒரு நாள் ஊடகக் கருத்தரங்கொன்று கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
ஊடகத்துறையில் நன்றாக அறிவூட்டப்பட்ட பல்துறை மற்றும் முனைப்பான மாணவர் சமூகத்தினை உருவாக்கும் நோக்கில் கண்டி எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் 2005 மற்றும் 2008 ஆம் ஆண்டு வகுப்பினர் ஒன்றிணைந்து அமைத்துக் கொண்ட அமைப்பினால் கல்லூரியில் பலமான ஊடகக் கழகமொன்றினை அமைக்கும் நோக்கில் இந்த ஊடக கருத்தரங்கு கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி இடம்பெற்றது.
தினகரன் தேசிய நாளிதழ் ஊடக அனுசரணையில் நடாத்தப்பட்ட இக்கருத்தரங்கில் தெல்தோட்டை ஊடக மன்றத்தின் முன்னணி ஊடகவியலாளர்களால் விரிவுரைகள் நடாத்தப்பட்டன.
இந்த கருத்தரங்கின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினர் மேற்கொண்டனர்.
இந்த கருத்தரங்கின் மூலம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களைக் கொண்டு பாடசாலையின் ஊடகக் கழகம் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.