பாடசாலைகளுக்குள் களமிறங்கும் STF அதிகாரிகள்!

Date:

பாடசாலைகளில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கு விசேட செயலணியொன்றை ஸ்தாபிக்கின்றமை தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடயம் தொடர்பில் கொழும்பில் நேற்று (டிச.01) ஊடகங்களுக்கு பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் S.ஹெட்டியாராச்சி கருத்து தெரிவித்தார்.

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு மேலதிகமாக குருநாகல் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஏனைய கடமைகளில் இருந்து நீக்கப்பட்டு, எதிர்காலத்தில் போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட  குற்றங்களில் ஈடுபடும் குழுக்களுக்கு எதிராக மாத்திரம் பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும்  அவர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கையில் வருடாந்தம் சுமார் 1100 முதல் 2000 கிலோகிராம் வரையான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்படுகின்றது.

கொழும்பு மாவட்டத்திலேயே ஹெரோயின் போதைப்பொருள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாகவும் ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர் சமூகத்தினரிடையே பல்வேறு போதைப் பொருட்களை விநியோகிப்பதற்கான திட்டங்கள் கடத்தல்காரர்களினால் ஆரம்பித்துள்ளமையும் அவதானிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...