இன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் இடியுடன் கூடிய மழை பெய்வதால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய கண்டி புகையிரத நிலையத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
அதேநேரம் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி குருநாகல், மாத்தளை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுகே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் குறிப்பிடப்பட்டுள்ளது.