மஜ்மா நகர் கொரோனா மையவாடியின் 3634 கப்ருகளை கொண்ட 10 ஏக்கர் பகுதியை துப்பரவு செய்து தர முன்வந்த பேருவளை குடும்பம்!

Date:

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையும், இப்பிரதேச பொது அமைப்புகளும் இணைந்து மேற்கொண்டு வரும் சிரமதான பணிகள் இன்றும் 24.12.2022 இடம்பெற்றன. இன்றைய சிரமமான பணிகளில் தன்னார்வ அமைப்புக்களுடன், இப்பிரதேச சிவில் பாதுகாப்பு படையினரும் பங்கேற்றிருந்தனர்.

பொது அமைப்புக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளினால் பகுதியளவில் மேற்கொள்ளப்பட்ட சிரமதான துப்புரவு பணிகளினால் இதுவரை 400 அளவிலான கபுருகள் உள்ளடக்கப்பட்ட பகுதிகள் துப்புரவு செய்யப்பட்டுள்ளன.

அதே நேரம் 3634 கப்ருகளை கொண்டுள்ள 10 ஏக்கர் காணியும், மீதமுள்ள அனைத்து பகுதிகளையும் விரைவாக துப்புரவு செய்யும் நடவடிக்கைகளை முடித்துத் தர பேருவளை, சீனக்கோட்டை பிரதேசத்தை சேர்ந்த, இங்கு நல்லடக்கம் செய்யப்பட்ட ஜனாஸா ஒன்றின் குடும்பத்தினர் முன்வந்துள்ளனர்.

இக்குடும்பத்தினர் 25 வேலையாட்களுக்கு நாளாந்தம் கொடுப்பனவுகளை தாங்கள் நேரடியாக வழங்கி மையவாடியின் துப்புரவு பணிகளை இன்று முதல் ஆரம்பித்துள்ளமை மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

எனவே வெளிப்பிரதேசங்களில் இருந்து சிரமதான பணிகளைக்காக இங்கு வர விரும்புவோர் பிரயாண சிரமங்களை கருத்தில் கொண்டு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும், இப்பிரதேசத்தைச் சேர்ந்த தன்னார்வமுள்ளோர்கள் இப்பணிகளில் தொடர்ந்தும் பங்கேற்கலாம் எனவும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஏ.எம். நௌபர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவை தவிர இப்பணிக்காக யாரும், யாருக்கும் ஏதேனும் கொடுப்பனவுகள் அல்லது நிதி உதவிகளை செய்ய வேண்டிய அவசியம் ஏதுமில்லை என்பதையும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...