மருத்துவ பீடம் தெரிவான மட்டக்களப்பு முஸ்லிம் மாணவர்களின் அடைவு பற்றி களுதாவளை சந்திரகுமாரின் சிறப்பான மதிப்பீடு

Date:

கல்விப் பொதுத்தாரதர சாதாரண தர பரீட்சையில் சித்திபெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வைத்திய பீடத்திற்கு 61 மாணவர்கள் தெரிவாகியுள்ளனர்.

இதில் 30 மாணவர்கள் மட்டக்களப்பு மத்தி வலயத்திலிருந்து தெரிவாகியுள்ளனர்.

மட்டக்களப்பு மத்தி வலயத்தில் இருந்து அதிகளவு மாணவர்கள் மருத்துவத் துறைக்கு தெரிவு செய்யப்பட்டமைக்கு பிரதான காரணங்களில் சில…

1) இந்த வலயம் அனேக தேசிய பாடசாலைகளையும், சகல வசதிகளையும், வளங்களையும் கொண்டிருப்பதால், மாணவர்களுக்கு உயர் தரமான கல்வி கிடைத்தமை.

2) உயிரியல், இரசாயனவியல், பௌதீகவியல் பாடங்களுக்கு தேர்ச்சி மிக்க ஆசிரியர் குழாம் காணப்படுதல். அத்தோடு வேறு இடங்களில் இருந்து அனுபவமிக்க ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்து கொள்ளுதல்.

3) இரவு வேளையில் நேரடி பயிற்சி வகுப்புகளை நடத்தி, மாணவர்களை பரீட்சைக்கு சிறப்பாக தயார் படுத்தியமை.

4) பாடசாலைச் சமூகம் மற்றும் அரசியல் வாதிகள் ,பள்ளிவாயல் போன்றவர்கள் மாணவர்களின் மேலதிக வகுப்புகள் மற்றும் பாட அடைவை மேம்படுத்த போதியளவு நிதியுதவி அளித்தமை.

5) இலங்கையில் முதல் தர வளவாளர்களை அழைத்து, விசேட கருத்தரங்குகளை நடத்தியமை.

6) பாடசாலை விட்ட பின்னரும், விடுமுறை நாட்களிலும் பாடசாலை உயிரோட்டமாக இயங்கி மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கியமை.

7) ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் கற்றல் கற்பித்தலில் ஈடுபட்டதோடு, மேலதிக வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கு மாதாந்தம் ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்தை வழங்கியமை.

08. மாணவர்கள் இடையே கைபேசி பாவனை, காதல் விவகாரம், போதைப்பொருள் பாவனை போன்ற கவனக் கலைப்பான்களின் தாக்கம் குறைவு.

9)இறை நம்பிக்கை மிகவும் அதிகம். இதனால் நன்னடத்தைகள் மேலோங்கி இருந்தமை.

10) பெற்றோர்கள் மட்டுமல்ல பழைய மாணவர்கள், அதிபர்கள், வலயக்கல்விப் பணிப்பாளர் மற்றும் பள்ளிவாயல் ஆகியோர் மாணவர்களின் கல்வி அபிவிருத்தியில் அதிகளவு அக்கறை செலுத்தி வருகின்றமை.

11) கல்விக்கான முதலீடு படிப்படியாக அதிகரித்து வருகின்றமை.

12) முஸ்லிம்களைப் பிரதிநித்துவப்படுத்தும் ஆசிரியர் தொழிற் சங்கங்கள் மற்றும் அதிபர் தொழிற் சங்கங்கள் தங்களது இனத்தின் கல்வி அபிவிருத்திக்கு அதிகளவு பங்களிப்பு செய்தல்.

ஆனால் தமிழ் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க பாடுபடுவோர் குறைவாகவும், சுயநலம் சார்ந்து சிந்தனை செய்வோர் தொகை அதிகமாகவும் இருப்பது தமிழ் சமூகத்தின் துரஷ்டமே!

ந.சந்திரகுமார்
மட்டக்களப்பு களுதாவளை

Popular

More like this
Related

விஜயதாசவுக்கு எதிரான தடை உத்தரவு கோரிக்கை நிராகரிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்சவையும் பதில் செயலாளராக கீர்த்தி...

ஜனாதிபதி ரணில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும்...

600,000 மாணவர்கள் காலை சாப்பாடு இன்றி பாடசாலைக்கு வருகின்றார்கள்!

600,000 பாடசாலை மாணவர்கள் காலை சாப்பாடு இன்றி பாடசாலைக்கு வருவதாக பாட்டலி...

சடுதியாக அதிகரிக்கும் தொழுநோயாளர்கள்: சிறுவர்களும் அதிகளவில் பாதிப்பு

நாட்டில் தொழு நோயாளர்கள் தொகை அதிகரித்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில், இந்த...