‘முஹம்மத் என்ற முன்மாதிரி மனிதர்’ :புத்தளத்தில் மாபெரும் கவியரங்கு!

Date:

வளர்ந்து வரும் கலைஞர்கள், திறமைகள் மற்றும் ஆர்வலர்களுக்கு புத்துயிர் அளிக்கும் மையமாகிய, “CREATE” – (Centre for Rejuvenating Emerging Artists, Talents and Enthusiasts) நிறுவனம், இலங்கை ஜமாத்தே இஸ்லாமி புத்தளம் கிளையின் ஏற்பாட்டில், புத்தளத்தில் மாபெரும் கவியரங்கொன்றை வழங்கவிருக்கின்றது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணிக்கு நிகழ ஏற்பாடாகிவரும் இக்கவியரங்கு, “முஹம்மத் என்ற முன்மாதிரி மனிதர்..!” என்ற கருப்பொருளில் 09 கவிஞர்களின் பிரசன்னத்தில் நடைபெறவுள்ளது.

முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பன்முக ஆளுமைகள் பலகோணங்களில் பகிரப்படவுள்ள இக்கவியரங்கில் பின்வரும் கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

இந் நிகழ்வு  கலாபூஷணம் ஜவாத் மரைக்கார் தலைமையில் நடைபெறும்.

வித்தியாசமான தலைப்புகளில் விழுமிய உணர்வுகள் சுமந்து விரிவான ஏற்பாடுகளுடன் தயாராகிவரும் இக்கவியரங்கம், நிச்சயம் நிறைவான பல படைப்புகளை வெளிக் கொணரவிருப்பதோடு அனைவரும் கண்டுகளிக்கும் விதமாக ஒரு திறந்தவெளி அரங்கில் மேடைப்படுத்தப்படவுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் வரண்ட வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...