யாழ்ப்பாணம் – சென்னை இடையே வாராந்தம் நான்கு விமான சேவைகள்: அடுத்த வாரம் முதல் ஆரம்பம்!

Date:

இந்தியாவின் Alliance Air 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு வணிகரீதியான விமான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கும் இடையில் இச்சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் வாரத்தில் 4 நாட்கள் இயங்கும்.

Alliance Air இன் முதல் சர்வதேசப் பயணத்தைத் தவிர, இது 41 வருட இடைவெளிக்குப் பிறகு சென்னையையும் யாழ்ப்பாணத்தையும் இணைத்துள்ளது.

டெல்லி, கோயம்புத்தூர், அகமதாபாத், ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, துபாய், திருவனந்தபுரம் மற்றும் மஸ்கட் ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்கு விமானப் பயணத்தை மிகவும் வசதியாக மாற்றும் வகையில் சென்னை வழியாக யாழ்ப்பாணத்தை சென்றடையும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.

Alliance Air இன் பல்வேறு விளம்பரச் சலுகைகளை www.allianceair.in எனும் இணையதளம் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...