வானிலை முன்னறிவித்தல்!

Date:

நாட்டிற்கு மேற்காகக் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் இலங்கையின் கரையோரங்களை விட்டுப் படிப்படியாக விலகிச் செல்கின்றது. இத்தொகுதி நாட்டை விட்டு விலகிச் செல்வதன் காரணமாக, நாட்டிலும், நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளிலும் உள்ள வானிலையில் இதன் தாக்கம் படிப்படியாகக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

பிரதான நகரங்களுக்கான வானில முன்னறிவித்தல்…

அனுராதபுரம் – அடிக்கடி மழை பெய்யும்

மட்டக்களப்பு – அடிக்கடி மழை பெய்யும்

கொழும்பு – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

காலி – பிரதானமாக சீரான வானிலை

யாழ்ப்பாணம் – அடிக்கடி மழை பெய்யும்

கண்டி – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

நுவரெலியா – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

இரத்தினபுரி – பிரதானமாக சீரான வானிலை

திருகோணமலை – அடிக்கடி மழை பெய்யும்

மன்னார் – அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

Popular

More like this
Related

DPL-2026 Season 5 சாம்பியனாக தெல்தோட்டை டிராகன்ஸ் அணி தெரிவு

ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை முன்னிட்டு தெல்தோட்டை, வாலிபர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட...

போலி விமான டிக்கெட்டுகள் தள்ளுபடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

விமான டிக்கெட்டுகளுக்கு மலிவான அல்லது சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குவதாகக் கூறி, சமூக...

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில். அமெரிக்க டொலர்கள்

இலங்கை நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு, மிகவும் நெகிழ்ச்சியான பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து...

எரிபொருள் QR குறியீடு தொடர்பில் 1000 முறைப்பாடுகள்!

தவறான முறையில் அல்லது பிறருடைய QR குறியீடுகளைப் பயன்படுத்தி எரிபொருள் பெற்றமை...