‘2021இல் தகவல் தொழில்நுட்ப துறையின் மூலம் 150 கோடி டொலர்கள் ஈட்ட முடிந்தது’

Date:

கடந்த 2021ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத்துறையின் மூலம் 150 கோடி அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை ஈட்ட முடிந்துள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையை அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் முக்கிய தொழிலாக மாற்றுவதற்கான விரிவான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் அரச மற்றும் தனியார் துறைகளில் சுமார் 20,000 பணியிடங்கள் வெற்றிடமாகவுள்ளதாகத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர், தொழில்துறைக்குத் தேவையான இளைஞர்களை சீரமைப்பது தமது அமைச்சின் பொறுப்பாகும் என்றார்.

ஒட்டுமொத்த டிஜிட்டல் கல்விக் கொள்கையைத் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த  அமைச்சர், தகவல் தொழில்நுட்பத் துறையில் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டுள்ள 50,000 பேர் நாட்டிற்கு அந்நியச் செலாவணியை ஈட்டப் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்றார்.

அடுத்த வருடம் 34,000 இளைஞர்களை இத்துறைக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாகவும்  கனக ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...

டிஜிட்டல் மயமாகும் அரச சேவைகள்: நிறுவனத் தலைவர்களுக்குப் புதிய வழிகாட்டல்கள் வெளியீடு!

இலங்கையில் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, அரச சேவைகளை டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாகத்...