நிலவும் கனமழை காரணமாக, நிலச்சரிவு அபாயம் உள்ள 4 பகுதிகளின் பெயர்களை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி கண்டி, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களைச் சேர்ந்த பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் மண்சரிவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படும் பகுதிகளை விட்டு வெளியேறுமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.