FIFA-2022: வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்காக மொராக்கோ மன்னருக்கு சவூதி இளவரசர் தொலைபேசியில் வாழ்த்து!

Date:

சவூதி இளவரசரும் பிரதமருமான பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், மொராக்கோவின் வரலாற்று உலகக் கோப்பை வெற்றிக்காக மொராக்கோ மன்னர் ஆறாம் முகமதுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இதன்போது, கத்தாரில் நடந்த பிஃபா உலகக் கோப்பையில் அதன் தேசிய அணியின் வரலாற்று சாதனைக்காக மொராக்கோ மன்னர் மற்றும் மக்களுக்கு பட்டத்து இளவரசர் வாழ்த்து தெரிவித்தார்.

பிஃபா உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க நாடு என்ற சாதனையை மொராக்கோ படைத்துள்ளது.

இந்நிலையில், மொராக்கோ சாதித்தது அனைவரையும் மகிழ்வித்த ஒரு அரபு விளையாட்டு சாதனையாகும், புதன்கிழமை நடைபெறும் அரையிறுதியில் மொராக்கோ தேசிய அணிக்கு வெற்றிபெற வாழ்த்துக்களையும் பட்டத்து இளவரசர் தெரிவித்தார்.

இதனையடுத்து மொராக்கோ மன்னர் முகமது, தனது நாட்டின் தேசிய அணிக்கு வாழ்த்துக்களுக்காகவும், மொராக்கோ மற்றும் அதன் மக்கள் மீதான பட்டத்து இளவரசரின் உன்னத உணர்வுகளுக்காகவும்  நன்றி தெரிவித்தார்.

சனிக்கிழமையன்று மொராக்கோ 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தி உலகக் கோப்பை வரலாற்றில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்க மற்றும் அரபு நாடு என்ற பெருமையை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...