சவூதி இளவரசரும் பிரதமருமான பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், மொராக்கோவின் வரலாற்று உலகக் கோப்பை வெற்றிக்காக மொராக்கோ மன்னர் ஆறாம் முகமதுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இதன்போது, கத்தாரில் நடந்த பிஃபா உலகக் கோப்பையில் அதன் தேசிய அணியின் வரலாற்று சாதனைக்காக மொராக்கோ மன்னர் மற்றும் மக்களுக்கு பட்டத்து இளவரசர் வாழ்த்து தெரிவித்தார்.
பிஃபா உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க நாடு என்ற சாதனையை மொராக்கோ படைத்துள்ளது.
இந்நிலையில், மொராக்கோ சாதித்தது அனைவரையும் மகிழ்வித்த ஒரு அரபு விளையாட்டு சாதனையாகும், புதன்கிழமை நடைபெறும் அரையிறுதியில் மொராக்கோ தேசிய அணிக்கு வெற்றிபெற வாழ்த்துக்களையும் பட்டத்து இளவரசர் தெரிவித்தார்.
இதனையடுத்து மொராக்கோ மன்னர் முகமது, தனது நாட்டின் தேசிய அணிக்கு வாழ்த்துக்களுக்காகவும், மொராக்கோ மற்றும் அதன் மக்கள் மீதான பட்டத்து இளவரசரின் உன்னத உணர்வுகளுக்காகவும் நன்றி தெரிவித்தார்.
சனிக்கிழமையன்று மொராக்கோ 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வீழ்த்தி உலகக் கோப்பை வரலாற்றில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் ஆப்பிரிக்க மற்றும் அரபு நாடு என்ற பெருமையை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.