அக்குறணையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் தேவை!

Date:

அக்குறணையில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கோரி அக்குறணை ஜம்இய்யதுல் உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதற்கமைய, கடந்த 2022 டிசம்பர் 24, 25 ஆகிய திகதிகளில் பெய்த அடைமழை காரணமாக அக்குறணை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

உயிர், உடமைகள், வியாபார ஸ்தலங்கள். வீடுகள், வாகனங்கள் பல்வேறுபட்ட சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான அனர்த்த சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்மால் முடியுமான ஒத்துழைப்புகளையும் உதவிகளையும் செய்வது எம் மீது கடமையாகும்.

எனவே, உங்களால் முடியுமான நிதி உதவிகளை மனமுவந்து தந்துதவுமாறு அக்குறணை ஜம்இய்யதுல் உலமா, அஸ்னா மத்திய பள்ளிவாசல், அக்குறணை மஸ்ஜிதுகள் சம்மேளனம், அக்குறணை வர்த்தக சங்கம் ஆகிய பொது நிறுவனங்கள் சார்பாக வேண்டிக்கொள்கிறோம்

மேலதிக குறிப்பு : உங்களது நிதி உதவிகளை அஸ்னா மத்திய பள்ளிவாசலில் அல்லது அக்குறணை ஜம்இய்யதுல் உலமா காரியாலயத்தில் அல்லது AKURANA JAMIYYATHUL ULAMA Disaster Relief fund 0100115399001 (Amana Bank – Akurana Branch) என்ற வங்கி இலக்கத்தில் வைப்பிலிடுமாறும் அதற்கான பற்றுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம். (வங்கியில் வைப்பிடுபவர்கள் Bank Slip இனை 0777 46 71 71 என்ற வட்ஸப் இலக்கத்திற்கு அனுப்பிவைக்கவும்)

மேலதிகமான விபரங்களுக்கு : 0777467171, 0773841409, 0772492609, 0777807070, 0767444327 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் அன்பாக கேட்டுக்கொள்கிறோம்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...