இறைச்சி கொள்வனவு செய்வோர் கவனத்திற்கு!

Date:

தற்போது நிலவும் குளிர் காலநிலையினால் உறுதி செய்யப்படாத நோயினால் கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால் இறைச்சி முத்திரை இருந்தால் மாத்திரம் இறைச்சியை கொள்வனவு செய்யுமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் கடும் குளிரால் உயிரிழந்ததாக கூறப்படும் விலங்குகள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“கடந்த இரண்டு நாட்களில், நாட்டின் பல நகரங்களில் உள்ள இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகளை நாங்கள் கண்காணித்தோம். அங்கு, பல வியாபாரிகள் மீது வழக்கு தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. அதன்படி, ஏதேனும் நோய் தாக்கி இறந்த விலங்கை இறைச்சிக்காக உண்பது மிகவும் ஆபத்தான நிலை என பொதுமக்கள் எச்சரிக்க வேண்டும். இந்த நோய் ஒரு தீவிரமான கண்டறியப்படாத நோயாக இருக்கலாம், மேலும் இது மனித நுகர்வுக்கு ஏற்றதல்ல.

மேலும், விலங்குகளை கொல்பவர்கள் பசு வதை சட்டத்தின்படி குற்றமாகும். சட்டத்தை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும், இறைச்சி வியாபாரிகள் இறந்த விலங்குகளின் உடல்களை இறைச்சிக்காக தயார் செய்ய வேண்டாம் என்று கடுமையாக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், மேலும் நாட்டின் அனைத்து இடங்களும் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகின்றன. அந்தச் சட்டங்களை யாராவது மீறினால், பசு வதைச் சட்டம் மற்றும் உணவுச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்..” என்றார்.

Popular

More like this
Related

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...