மின்சார மீட்டர்களுக்கு தட்டுப்பாடு!

Date:

மின்சார மீட்டர் மற்றும் கம்பிகள் தட்டுப்பாடு காரணமாக 35,000 புதிய மின் இணைப்புகளை வழங்க முடியவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.

இதனால், புதிய மின் இணைப்பு பெற, டெபாசிட் செய்த மின் நுகர்வோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் (விநியோகப் பிரிவு 4) ரொஹான் சேனவிரத்ன தெரிவிக்கையில் மின்சார மீட்டர் கம்பிகள் மட்டுமன்றி மின்மாற்றிகளுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்தார். 300 முதல் 400 டிரான்ஸ்பார்மர்கள் தேவை என்றும், தற்போது 100க்கு மேல் மட்டுமே உள்ளன என்றும் அவர் கூறினார்.

இந்த சாதனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலர்களை பெறமுடியாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இம்மாதம் 6000 மின்சார மீட்டர்கள் இறக்குமதி செய்யப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் நளிந்த இளங்ககோன் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை: சட்டங்களை கடுமையாக்க இலங்கை அரசு பரிசீலனை!

நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த, அதுதொடர்பான குற்றங்களுக்கு மரண...

குழந்தைகளுக்கென அறிமுகமாகும் போசனைத் திட்டம்

கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் வீழ்ச்சியடைந்த ஊட்டச்சத்து நிலையை...

லங்கா மெட்ரோ பேருந்து சேவை விரிவாக்கத்துக்கு 1 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை ஒதுக்கீடு!

லங்கா மெட்ரோ டிரான்சிட் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பொதுப் போக்குவரத்துச் செயல்பாடுகளை...