இலங்கையர்களுக்கு ஜப்பானில் வேலை வாய்ப்புகள்!

Date:

ஜப்பானில் கார் இருக்கை உற்பத்தி தையல் தொழில் வாய்ப்புகளுக்கான விண்ணப்பங்களை அடுத்த வாரம் ஏற்றுக்கொள்ளவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமை அலுவலகத்தில் 2022 டிசம்பர் 28 புதன்கிழமை நடைபெறவுள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகுதியுடையவர்கள் பதிவு செய்ய முடியும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை கொண்டு வருமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சம்பந்தப்பட்ட தகுதியுள்ள விண்ணப்பதாரர்களைக் கோருகிறது.

மேலும் படிவங்களை SLBFE இன் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk  இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...