இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை கொடுக்கவே நாட்டைக் கையகப்படுத்தினேன்: ஜனாதிபதி

Date:

நாடு பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்தாலும், இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்பவே நாட்டைக் கையகப்படுத்த முன்வந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் உள்ள மாவட்ட 306 C-2 லியோ கழகத்திற்கு 6,500 உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும்  லியோ தினத்தை முன்னிட்டு இன்று காலை கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

இன்றைய தினத்தைப் பற்றி சிந்தித்து தீர்மானங்களை எடுக்காமல் 25 வருடங்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்து தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

 

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...