உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி அறிவித்துள்ளார்.
கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை 2022 தொடரின் முதல் அரை இறுதி போட்டியில், குரோஷியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. இந்த நிலையில், கால்பந்து உலகக்கோப்பை இறுதி போட்டியுடன் அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி ஓய்வு பெறுகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டி தான் தனது கடைசி உலக்கோப்பை போட்டியாக இருக்கும் என லியோனல் மெஸ்ஸி உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை வரும் 18 நடைபெறும் இறுதிப் போட்டியே என்னுடைய கடைசி போட்டியாக இருக்கும். அதில் உலககோப்பையை வென்று தருவேன் என நம்புகிறேன்.உலக கோப்பையில் அர்ஜென்டினாவுக்காக 11 முறை கோல் போட்டு, அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி படைத்துள்ளார்.