பாடசாலை ஆசிரியர் மீது செந்தில் தொண்டமான் தாக்குதல்?

Date:

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செந்தில் தொண்டமான் தன்னை தாக்கியதாக கூறி பண்டாரவளை புனாகல தமிழ் மகா வித்தியாலய ஆசிரியர் ஒருவர் தியத்தலாவை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர்  செந்தில் தொண்டமான் பாடசாலைக்குள் வந்து தாக்குதலை நடத்தியதாக ஆசிரியர் கூறுகிறார்.

கடந்த சில நாட்களாக மோசமான வானிலை காரணமாக பாடசாலைக் கட்டடங்களை சீரமைக்க ஆசிரியர்கள் மற்றும் பலர் ஞாயிற்றுக்கிழமை பாடசாலைக்கு வந்துள்ளனர்.

ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்  செந்தில் தொண்டமான் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உள்ளூராட்சி மன்றத் தலைவருக்கும், குறித்த ஆசிரியருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ​​முன்னாள் மாகாண சபை உறுப்பினர்  செந்தில் தொண்டமான், ஆசிரியரைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

செந்தில் தொண்டமான் மறைந்த  ஆறுமுகன் தொண்டமானின் மூத்த சகோதரியின் மகன் ஆவார். முன்னதாக 2015ஆம் ஆண்டு தபால் ஊழியர் ஒருவரைத் தாக்கியதற்காக அவரைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேலும், 2014 ஆம் ஆண்டு ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில்  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் அவர்களின் வாகனத்தை குறுக்கே சென்று இடையூறு செய்ததாக கூறப்படும் செந்தில் தொண்டமானை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...