பாடசாலைகளுக்கு அருகில் நடத்தப்பட்ட சோதனையில் பாடசாலை மாணவர் உட்பட 47 பேர் கைது!

Date:

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு அருகில் நேற்று மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனையின் போது மிரிஹானவில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் 17 வயதுடைய பாடசாலை மாணவர் உட்பட 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் உள்ள 149 பாடசாலைகளுக்கு அருகாமையில் காலை 6.30 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணி வரை இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சோதனையின் போது 1.260 கிலோ ‘மாவா’, 9.630 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 2.38 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 207 கிராம் கஞ்சாவை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கஞ்சாவுடன் பாடசாலை மாணவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலைகளுக்கு அருகில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...