‘மக்கள் பட்டினி கிடக்கும்போது கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட முடியாதுள்ளது’

Date:

மக்கள் பட்டினி கிடக்கும்போது  நத்தார் பண்டிகையை கொண்டாட முடியாது என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 6.1 மில்லியன் மக்கள் ஒருவேளை உணவு உண்ணாமல் பட்டினி கிடப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாகவே  இந்த ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகையை நாட்டில் இவ்வளவு அழிவுகளுடன் கொண்டாட முடியாதுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

ஆட்சியாளர்களின் மோசமான செயல்களால் நாட்டுக்கு இப்படி நேர்ந்துள்ளது.

பிச்சைக்காரர்கள் போல் உணவும் பானமும் கேட்டு உலகம் முழுவதும் செல்கிறார்கள் எனவும் கொழும்பு பேராயர்  கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.

இவ்வளவு அழகான, பசுமையான  எமது  நாடு  உணவு மற்றும் பானங்களுக்காக பிச்சை எடுப்பதற்காக  நாம் வெட்கப்பட வேண்டும் எனவும் மோசமான ஆட்சியாளர்களின் செயலால்தான் நாட்டுக்கு  இந்த நிலை  எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...