மஜ்மா நகர் கோவிட் மையவாடிக்கு பாதுகாப்பு வேலி!

Date:

ஓட்டமாவடி கோரளைப்பற்று பிரதேச சபை நிர்வாக எல்லைக்குள் அமைந்துள்ள மஜ்மா நகர் சூடுபத்தியசேனை கொவிட் ஜனாஸா மையவாடிக்கான யானைத் தடுப்பு சுற்று வேலி வேலைகள் தேசிய முஸ்லிம் சபையின் (NMA) அனுசரணையுடன் கோவிட் ஜனாஸா நலன்புரிச் சங்கத்தின் தேசியத் தலைவரும், பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அல்ஹாஜ் அப்ஸல் மரிக்கார் அவர்களினால் நேற்று (2022.12.04) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் இரண்டாம் கட்டமாக பாதுகாப்பு மதிலும், மூன்றாம் கட்டமாக வெளி இடங்களிலிருந்து ஜியாரத் செய்ய வருவோருக்கான அடிப்படை வசதி மண்டபத்தையும் நிர்மாணிப்பதற்கான முடிவும் எடுக்கப்பட்டது.
அதேவேளை கோவிட் ஜனாஸா மரணங்கள் சம்பந்தமான வரலாற்றுப் பதிவொன்றை எதிர்கால சந்ததிகளின் தெளிவிற்காக புத்தகவடிவில் கொண்டுவருவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கோரளைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் கெளரவ நெளபர்,  செயலாளர் சிஹாப்தீன், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், மத்திய மாகாண கோவிட் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் சித்தீக் (கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர்), உப தலைவர்  சப்பான் – உடுநுவர பிரதேச சபை உப தவிசாளர், செயலாளர் ஹிதாயத் சத்தார் – முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர், இணைச் செயலாளர் நளீர், பொருளாளர் ரூமி இவர்களுடன் மர்ஹூம் M H M அஷ்ரப் அவர்களின் புதல்வர் அமான் அஸ்ரப் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...