முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 20 பேர் உயிரிழப்பு!

Date:

ரஷ்யா, கெமரோவோவில் உள்ள சைபீரியா நகரில் பதிவு செய்யப்படாத முதியோர் இல்லத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

அனைவரும் முதியவர்கள் என்பதால், கட்டிடத்திற்குள் சிக்கியவர்கள் வெளியில் வர முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். அதற்குள் தீ பரவியுள்ளது.

தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள், கட்டிடத்தின் இரண்டாம் தளம் முழுவதும் எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சயில் ஈடுபட்டனர். மேலும், கட்டிடத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தீ விபத்தில் சிக்கி இதுவரை 20 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஷ்யா முழுவதும் முதியோருக்கான பல முதியோர் இல்லங்கள் பதிவு செய்யாமல் இயங்கி வருவதாகவும், அதிகாரப்பூர்வமாக அவை தனிப்பட்ட சொத்தாக கருதப்படுவதால் ஆய்வுக்கு உட்படுத்த முடியாது எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளன.

 

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் சாத்தியம்

இன்றையதினம் (10) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முக்கியமாக வறண்ட வானிலை நிலவும்...

‘சமநீதி’ மாதாந்த சஞ்சிகை வெளியீட்டு விழா நாளை கொழும்பில்

'சமநீதி' (Equity) என்ற பெயரிலான புதிய மாதாந்த சஞ்சிகையொன்று இம்மாதம் முதல்...

‘சிசு செரிய’ சேவையை மேலும் விரிவுபடுத்த அரசாங்கம் தீர்மானம்!

பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவையை முறைப்படுத்துவது தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு...

மலேசியாவின் பகாங் மாநிலத்தில் புனித குர்ஆன் பல்கலைக்கழகம் உருவாக்கம்: சுல்தான் அப்துல்லா வரலாற்று அறிவிப்பு!

மலேசியாவின் பகாங் (Pahang) மாநிலத்தில் குர்ஆனியக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், 'புனித...