ருமேனியா எல்லையில் லொறிக்குள் மறைந்திருந்த இலங்கையர்கள் உட்பட பலர் கைது!

Date:

ருமேனியா நாட்டிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ருமேனிய எல்லையில் இரண்டு  லொறிகளில் மறைந்திருந்த புலம்பெயர்ந்தோரை, பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த பகுதியில் பயணித்த லொறி ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போது அதிலிருந்து 16 எரித்திரியா மற்றும் பங்களாதேஷ் பிரஜைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

சோதனையின் போது மற்றுமொரு  லொறியில் 11க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மற்றும் பாகிஸ்தான் பிரஜைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 முதல் 42 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு  பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Popular

More like this
Related

முஸ்லிம் சமய திணைக்களத்தின் ஏற்பாட்டில், திருகோணமலை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு முஸ்லிம் சமய...

பேருந்துகளில் விபத்துகளை குறைக்க AI கேமராக்கள் பொருத்த திட்டம்!

நீண்ட தூர பேருந்துகளில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு புதிய...

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...