வானிலை முன்னறிவித்தல்!

Date:

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மழை நிலைமை : காங்கேசந்துறையில் இருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோமழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருந்துவீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடல் நிலை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

Popular

More like this
Related

ரயில் பயணத்தைத் தவிர்க்குமாறு ஈரானியர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

ஈரானியர்கள் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணி வரை ரயில்களில் பயணம்...

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் கைது

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கோன்கஹாகே மற்றும் முன்னாள்...

இலங்கையின் பல பகுதிகளில் சூரியன் உச்சம்

சூரியனின் வடதிசை நோக்கிய நகர்விற்கு அமைவாக, ஏப்ரல் 05 முதல் 15 ஆம்...

புதிய பொருளாதார நிவாரணத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத் தொகுப்பைச் சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,...