செல்லுபடியாகும் உரிமம் இன்றி வேலை தேடுபவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLFEB) அதிகாரிகளால் ‘டுபாய் சுத்தா’ என அழைக்கப்படும் நிஸ்ஸங்க பிரியதர்ஷன கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேக நபர் விரைவில் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த அறிவித்தலின் பிரகாரம், குறித்த நபர் இன்று (28) காலை பணியகத்திற்கு வந்த போது வாக்குமூலம் பதிவு செய்ததன் பின்னர் கைது செய்யப்பட்டார்.