அலி சப்ரி – சவூதி வெளியுறவு அமைச்சர் இடையே சந்திப்பு

Date:

பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் சவூதி அரேபியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் அஹமட் ஆகியோருக்கு இடையில் நேற்று (26) சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையே எரிசக்தி ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பெரும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் சகல விடயங்களிலும் சவூதி அரேபியா அக்கறை கொண்டுள்ளது எனவும் அலி சப்ரி குறிப்பிட்டார்.

சவூதி அரேபியா, இலங்கையில் முதலீடு செய்யும் வாய்ப்புகள் குறித்து ஆராயும் என்றும், குறிப்பாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் சவூதி அரேபியாவில் வேலை வாய்ப்புகள் குறித்து இலங்கை பரிசீலிக்கப்படும் என்றும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கை வர்த்தகத்திற்கு சிறந்த இடமாக விளங்குவதாகவும், தெற்காசியாவில் மட்டுமன்றி கண்டத்திற்கே இலங்கை வர்த்தகத்திற்கு சிறந்த இடமாக இருக்க முடியும் எனவும் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...