யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர், நேற்று தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெல்லிப்பழை, வீமன்காமம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவனே இவ்வாறு தனது உயிரை மாய்த்துள்ளார்.
இவர் கொக்குவில் பகுதியில் உள்ள ஒரு பிரபல பாடசாலையில் கணிதப் பிரிவில் உயர்தரம் கற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று அதிகாலை மாணவன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவர் மீட்கப்பட்ட போது வித்தியாசமான முறையில் ஆடை அணிந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது விளையாட்டின் ஏதேனும் சவால்களால் (Tasks) தூண்டப்பட்டதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாகத் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மரண விசாரணைகளை மேற்கொண்டார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்கள் தோன்றினால், தயவுசெய்து உடனடி ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். உதவிக்கு அருகிலுள்ள சுகாதார நிலையங்கள் அல்லது உதவி இலக்கங்களை நாடுங்கள்.
