50 இலட்சம் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான டெண்டர் கோருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக 50 இலட்சம் முட்டைகள் இறக்குமதி செய்யப்படும் எனவும் இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எத்தனை முட்டைகளை இறக்குமதி செய்வது, எந்த இறக்குமதியாளரை தேர்வு செய்வது என்ற அனைத்து முக்கிய முடிவுகளும் இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனங்களால் எடுக்கப்படும் என்றும், செயல்முறை விரைவில் முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இதேவேளை, நாட்டின் 03 மாகாணங்களை மையப்படுத்தி இன்று முட்டை 53 ரூபாவிற்கு விற்பனை செய்யும் நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.