இலவச எரிபொருளை விநியோகிக்க 122 மில்லியன் செலவாகும்!

Date:

சீன அரசாங்கத்தினால் நெற்செய்கையாளர்களுக்கு வழங்கப்படும் டீசல் கையிருப்பை விநியோகிப்பதற்காக அரசாங்கத்தினால் 122 மில்லியன் ரூபா செலவிடப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த டீசல் கையிருப்பு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் நாடளாவிய ரீதியில் பவுசர்கள் ஊடாக விநியோகிக்கப்படும்.

விவசாய அமைச்சின் ஊடாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு தேவையான பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்கவிடம் விவசாய அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, இவ்வருடத்திற்கு கிடைக்கப்பெறவுள்ள நிதியைப் பயன்படுத்தி உரிய தொகையை இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

சீன அரசாங்கம் இந்நாட்டு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கிய 6.8 மில்லியன் லீற்றர் டீசல் தொகை விவசாயிகள் அபிவிருத்தி திணைக்களத்தினால் அறுவடைக்காக விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)...

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி...