இளைஞர் பிரதிநிதித்துவ விவாதம் கோரி சபாநாயகருக்கு கடிதம்!

Date:

பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் இளைஞர் பிரதிநிதித்துவத்துக்கான இரண்டாவது விவாதத்திற்கான தனிப்பட்ட உறுப்பினர் பிரேரணையை எடுத்துச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்குஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற மற்றும் மாகாண சபை தேர்தல் சட்டங்களை திருத்துவதற்கான பரிந்துரைகளை அமைச்சு வழங்காததாலும், அவற்றுக்கான கால அவகாசம் அன்றைய தினம் முடிவடையவுள்ளதாலும், ஜனவரி 14 ஆம் திகதிக்கு பின்னரான ஒரு நாளில் உரிய விவாதத்தை நடத்துமாறு இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் 25% இளைஞர் பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கான தனியார் உறுப்பினர்களின் முன்மொழிவுகளில் இருந்து உள்ளூராட்சி பிரதிநிதித்துவத்திற்கான அமைச்சின் பரிந்துரை நேற்று (05) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

ரயில் பயணத்தைத் தவிர்க்குமாறு ஈரானியர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

ஈரானியர்கள் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணி வரை ரயில்களில் பயணம்...

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் கைது

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கோன்கஹாகே மற்றும் முன்னாள்...

இலங்கையின் பல பகுதிகளில் சூரியன் உச்சம்

சூரியனின் வடதிசை நோக்கிய நகர்விற்கு அமைவாக, ஏப்ரல் 05 முதல் 15 ஆம்...

புதிய பொருளாதார நிவாரணத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத் தொகுப்பைச் சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,...