ஐ.தே.க தனித்துப் போட்டியிட முடிவு!

Date:

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமது கட்சி நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடுவதற்கு சில உள்ளூராட்சி சபைகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம், அவ்வாறு இல்லாத உள்ளூராட்சி சபைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி தனித்து போட்டியிடும் எனவும் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ள நிலையில், தற்போது வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

திறமையான புதியவர்களுக்கு அதிக இடங்கள் வழங்கப்படும் என்றும் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

Popular

More like this
Related

அரபு மொழிக்கான ‘தோஹா வரலாற்று கலைக்களஞ்சியம் பணிகள்’ பூர்த்தி!

12 ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் தொகுப்பு முயற்சிகளின் பயனாக,...

கொழும்பு அல் ஹிஜ்ராவில் “Back to school 2025” திட்டம்.

நேற்று (28) டிட்வா சூறாவளி பேரழிவால் பாதிக்கப்பட்ட கொழும்பு 10 அல்...

களுத்துறை மாவட்ட யாத்திரிகர்களுக்கான புனித ஹஜ் வழிகாட்டல் கருத்தரங்கு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் ஹஜ் உம்ரா குழு இணைந்து,...