‘தாய்நாட்டை நேசிக்கும் எந்தப் பிரஜையும் சுதந்திர தினத்தை ‘கரிநாள் என்று சொல்லமாட்டார்கள் ‘

Date:

இலங்கையில் பிறந்த எந்தக் குடிமகனும், தாய்நாட்டை நேசிக்கும் எந்தப் பிரஜையும் தேசிய சுதந்திர தினத்தை கரிநாள் என்றோ, கறுப்பு நாள் என்றோ சொல்லமாட்டார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை வடக்கு கிழக்கில் கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி பேரணிக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பில் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் “இந்த நாட்டில் எதிர்த் தரப்பினரின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கி சிலர் தேசிய சுதந்திர தினத்தை கறுப்பு நாள் என்று சொல்வதும், கரிநாள் என்று கூறுவது துரதிர்ஷ்டவசமே.

அவ்வாறானவர்களின் விமர்சனங்களை ஒரு பக்கத்தில் தூக்கி வைத்துவிட்டு பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க, நாட்டை நேசிக்கும் அனைத்து உறவுகளும் ஒன்றாகச் சங்கமிக்க வேண்டும்” என்று ரணில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...