தேர்தல் நடத்த பணம் இல்லை என்றால், இராஜாங்க அமைச்சர்கள் எதற்கு? :பீரிஸ்

Date:

தேர்தலை நடத்த பணம் இல்லை என்றால், இராஜாங்க அமைச்சர்கள் 39 பேரை நீக்க வேண்டும் என சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று சுதந்திர மக்கள் காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட  போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 

நாட்டில் தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை என்று அரசாங்கம் போலியான பிரசாரங்களை செய்து வருகிறது. உண்மையில் நிதி இல்லை என்றால் நாட்டிலுள்ள 39 இராஜாங்க அமைச்சர்களை நீக்க வேண்டும்.

அத்துடன் 39 இராஜாங்க அமைச்சர்களுக்காக 340 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு பாரியளவில் நிதி செலவிடப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராஜாங்க அமைச்சர்கள் எவருமில்லாது நாட்டை ஒரு வருடம் ஆட்சி செய்தார்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

மனிதாபிமானப் பணிக்குப் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜப்பானிய மருத்துவக் குழு!

புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் நோக்கில் இலங்கை...

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) நூற்றாண்டு விழா

நாட்டின் முதன்மை இலத்திரனியல் ஊடகத் தொடர்பாடல் நிறுவனமாகக் கருதப்படும் இலங்கை ஒலிபரப்புக்...

இந்திய நிதியுதவியின் கீழ் மலையகத்தின் 24 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

லைன் அறைகளுக்கு பதிலாக தனி வீடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் எல்கடுவ...

இன்று முதல் கர்ப்பிணிப் பெண்களுக்கான ஊட்டச்சத்து கொடுப்பனவு வழங்கப்படும்!

நிலவும் பேரிடர் சூழ்நிலை மற்றும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, கர்ப்பிணிப்...