மின் கட்டண அதிகரிப்பு தொடர்பிலான இறுதி தீர்மானம் இன்று!

Date:

மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று(09) இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் எட்டப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட மின் கட்டண திருத்த யோசனை தொடர்பில் அமைச்சர்களின் கருத்துகளைப் பெறும் நோக்கில் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில்,  யோசனைக்கு அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைக்கும் என்று நம்புவதாக  வலுச்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கடந்த அமைச்சரவை கூட்டத்தில் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.

பொது பயன்பாடுகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல தரப்பினர் எதிர்ப்பை வெளியிட்டிருந்த நிலையில், இந்த யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.

எனினும் அன்றைய தினம் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டம் வரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்!

குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில்...

பயங்கரவாதத் தடைச் சட்டம் செப்டெம்பரில் இரத்து செய்யப்படும்: பாராளுமன்றில் அமைச்சர் விஜித

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (PTA) செப்டெம்பர் முற்பகுதிக்குள் நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக,...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வகையில்...

சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கத்தினர்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கங்கள் கொழும்பில் அமைந்துள்ள மத்திய தபால் பரிமாற்றத்திற்கு...