மொனராகலை உயர் பொலிஸ் அதிகாரி STF அதிகாரிகளினால் அதிரடி கைது!

Date:

மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

350 கஞ்சா செடிகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வீட்டில் நேற்றிரவு விசேட அதிரடிபடையினர் சோதனைகளை நடத்தியுள்ளனர்.

இதன்போது, 350 கஞ்சா செடிகள் மற்றும் நவீன உலோக ஸ்கேனர் இயந்திரமொன்றும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரை மொனராகலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ரணிலின் விளக்கமறியல்: நீதிமன்ற வளாகத்தில் கடும் பதற்றம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில்...

ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியாக அவர் பணியாற்றிய காலப்பகுதியில்...

நான்காவது அறிவுக் களஞ்சியம் இறுதிப் போட்டி கொழும்பில்..!

தேசிய மட்டத்திலான நான்காவது அறிவுக் களஞ்சிய நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியானது நாளை 23...