‘வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்தவே போராட்டத்தை தெரிவு செய்தோம்’: சிறையிலிருந்து வசந்த கடிதம்

Date:

தமது இயலாமையை மறைப்பதற்காகவும் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் போராட்டக்கள செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பாரிய அவதூறு பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வசந்த முதலிகே குற்றம் சுமத்தியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே பொதுமக்களுக்கு பகிரங்க கடிதமொன்றை நேற்று அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில், வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்காக போராட்டத்தை தெரிவு செய்ததாகவும் அதற்காக எந்தவித தியாகத்தையும் செய்வதற்கு மாணவர் இயக்கம் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையான பயங்கரவாதிகள் சுதந்திரமாக உள்ளபோது, பயங்கரவாதியாக முத்திரை குத்தப்பட்ட தான் சிறையில் இருந்த 135 ஆவது நாளே இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி எனவும், சிறந்த சமூகத்திற்காக போராடி, மாற்றத்திற்காக கோரிக்கை விடுத்தவர்களும் சிறையிலுள்ளதாகவும் வசந்த முதலிகேவின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் போராட்டத்தின் எதிர்பார்ப்புகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள வசந்த முதலிகே ‘ரணில் ராஜபக்ஸ ஜூன்டா’ அரசாங்கம் தனது பணிகளை வழமை போன்று முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது இடியுடன் மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலம் இலங்கை தான்’: வசீம் அக்ரம் புகழாரம்!

உலகிலேயே மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாக தரப்படுத்தப்படுவதற்கு தகுதியான ஒரு நாடாக இலங்கை விளங்குவதாக...

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...