கத்தாரால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக அல் குர்ஆன் “கிராத்” போட்டியில் அக்குறணையைச் சேர்ந்த அஷ்-ஷெய்க் காரி ஜாமில் ஹாபிழ் முதல் 100 இடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆன்லைனில் நடந்த இந்த போட்டியில் உலகெங்கிலும் உள்ள 1273 காரிகள் கலந்து கொண்டனர், மேலும் முதல் 100 பேர் அடுத்த சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் காரி ஜாமில் ஹாபிழ் மட்டும் இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கத்தாரால் நடத்தப்படும் மிகப்பெரிய உலக அல் குர்ஆன் போட்டி இதுவாகும். தேர்ந்தெடுப்பவர்கள் பெரிய சர்வதேச காரிகள் ஆவார்கள். காரி ஜாமில் ஹாபிழின் வெற்றி இலங்கைத் நாட்டிற்கும் அக்குறணைக்கும் மிகவும் பெருமையான தருணமாகும்.
கத்தார் தோஹாவில் விரைவில் நடைபெறவிருக்கும் காரி ஜாமில் ஹாபிழின் அடுத்த சுற்றுக்காக நியூஸ் நவ் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றோம்.